மின் துண்டிப்பு நேரம் அதிகரிப்பு!

0
112

நாடாளாவிய ரீதியில் இன்று முதல் மின் வெட்டு காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25 ஆம் திகதிவரை நாளாந்தம் இரண்டு மணித்தியாலமும், 20 நிமிடமாக மின் துண்டிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
பழைய லக்ஸபான மின் உற்பத்தி பிரிவு ஒன்று தொழில்படாமை, வெஸ்ட்கோஸ்ட்டில் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் திடீரென அதிகரித்த கேள்வி என்பன காரணமாக, இவ்வாறு மின் வெட்டு காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதிவரை A முதல் L வரையான மற்றும் P முதல் W வரையான வலயங்களில் பகலில் ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படவுள்ளது.
இதேவேளை, நிலக்கரியை உடனடியாக கொள்முதல் செய்யாவிட்டால் அக்டோபர் 28ஆம் திகதிக்கு பின்னர் 10 முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வருடம் ஒப்பந்தம் வழங்கிய நிறுவனத்திடம் இருந்து நிலக்கரி கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை தடுக்கும் நோக்கில் மூன்றாம் தரப்பு செயற்படுவதாக அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.