மத ஸ்தலங்களின் மின்சார கட்டண பிரச்சினை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

0
170

மத ஸ்தலங்களில் மின்சார கட்டண பிரச்சினை தொடர்பில் மின்சார சபை மற்றும் புத்தசாசன அமைச்சுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
புதிய மின் கட்டண திருத்தத்துடன் மத ஸ்தலங்களில் மின் கட்டணம் உயர்வடைந்தமை தொடர்பில் புத்தசாசன அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சில சமய ஸ்தலங்களில் ஆசிரமக் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் தருணத்திலும், ஒரு விகாரையில் அதிகளவான துறவிகள் தங்கி இருக்கும் போதும் மின்சார பாவனை ஒப்பீட்டளவில் அதிகரிப்பது தொடர்பாகவும், மேலும் சில விடயங்கள் குறித்தும் கலந்துரையாடலில்
கவனம் செலுத்த வேண்டும் என செயலாளர் தெரிவித்தார்.
ஆலயங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் நிலவும் மின் கட்டணப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றை வழங்க எதிர்பார்ப்பதாக
பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மஹரகம ஸ்ரீ சந்திரஜோதி ஆலயத்தின் 50 வது ஆண்டு விழாவில் பிரதம அதிதியாக நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.