புளியம்பத்தை மகாசக்தி முன்பள்ளி
பாடசாலை திறப்பு விழா

0
253

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட புளியம்பத்தை மகாசக்தி முன்பள்ளி பாடசாலை திறப்பு விழா நேற்று கலைவாணி கனிஸ்ட வித்தியாலய அதிபர் திரு.ஆ.நல்லதம்பி தலைமையில் இடம்பெற்றது.
மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கல், மற்றும் பாடசாலை பெயர் பலகை திரைநீக்கம் இடம் பெற்றது.

நிகழ்விற்கு அதிதிகளாக திருக்கோவில் வலயக் கல்விப் பண்ணிப்பாளர் வை. ஜெயசந்திரன், ஆலையடி வேம்பு கோட்டக்கல்வி அதிகாரி திரு.கருணாகரன், ஆலையடி வேம்பு பிரதேச சபை தவிசாளர் .கினோஜன், ஆயுள்வேத வைத்திய அதிகாரி பாத்திமா ஆமிலா ஜமால்டீன், கால் நடை வைத்திய அதிகாரி கோகுலதாஸ் ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் பாத்திமா கரீமா,மாதர் சங்க உறுப்பினர்கள் அப்பிரதேச ஆலய தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர். இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான இணைந்த கரங்களில் பயணிக்கும் தினேஸ்ராஜ்,ஜனபாலசந்திரன் குடும்பத்தினரும், கனகராஜ் நடராஜ மணி குடும்பங்களின் நிதியுதவி வழங்கினர்.

இதன்போது அதி கஸ்ட புளியம்பத்தைக் கிராமத்தில் இயங்கி வருகின்ற திருக்கோயில் கலைவாணி வித்யாலயத்தில் கல்வி பயில்கின்ற 15 மாணவர்களுக்கும் இணைந்த கரங்கள் அமைப்பினால் திறந்து வைக்கப்பட்ட மகாசக்தி பாலர் பாடசாலையில் கல்வி பயில இருக்கின்ற 15 மாணவர்களுக்குமென மொத்தமாக 30 மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் ராஜ் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரான புவனேஸ் ராஜா. மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இணைந்த கரங்கள் அமைப்பினால் ஆசிரியர்களுக்கான ஒரு மாத கொடுப்பணவும் முன்பள்ளி ஆசியரிடம் வலயக் கல்விப் பணிப்பாளரினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது…