அவிசாவளை – வத்தேகடை பிரதேசத்தில் இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான 2 கிலோ 65 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவிசாவளை புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை சோதனையிட்டுள்ளது.
இதன்போது, அவரிடம் ஹெரோயின் அடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு ஹெரோயின் பொதி பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபரிடம் ஹெரோயின் அடங்கிய பொதிகளுடன், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட இருபத்தி மூன்று இலட்சத்து 85,300 ரூபாய் பணமும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
36 வயதுடைய சந்தேகநபரை அவிசாவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதுடன், அவரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.