உக்ரைனில் பொதுமக்களின் வாகனங்களை குறிவைத்து ரஷிய படைகள் தாக்குதல்! :பலி எண்ணிக்கை உயர்வு.

0
162

உக்ரைனின் ஜபோரிஜியா நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. உக்ரைனின் ஜபோரிஜியா நகரில் ரஷிய படைகள் நேற்று நடத்திய தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டதோடு 28 பேர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இத்தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்வடைந்துள்ளதோடு 85க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை ஜபோரிஜியா பிராந்திய கவர்னர் ஸ்டாருக் இணையத்தளம் வாயிலாக வெளியிட்டுள்ளார். ‘ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை நோக்கி மக்கள் சென்ற வாகனங்களின் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷியப் படைகள் பொதுமக்களின் வாகனங்கள் மீது ரொக்கெட் தாக்குதலைத் தொடுத்தன’ என்று அவர் கூறியுள்ளார். எனினும் இதுதொடர்பாக ரஷியா தரப்பில் உடனடியாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.