கொழும்பு, பேலியாகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெல்லிகலவத்த பிரதேசத்தில், அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலத்தை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.
பொலிஸ் அவரச தொலைபேசி இலக்கமான 119 என்ற இலக்கத்துக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சுமார் 40 – 50 வயது மதிக்கத்தக்க 5 அடி 7 அங்குல உயரமுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.