மொனராகலை கோனங்கார பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கய்லம்புகுர பிரதேசத்தில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
ஒக்கம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 35 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரை ஒக்கம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் காட்டு யானையின் தொல்லை அதிகரித்து இருப்பதாகவும் உரிய அதிகாரிகள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.