மட்டக்களப்பு,பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள மண்முனை தென்எருவில்பற்று கோட்டத்தின் சிறுவர் தினநிகழ்வு இன்று பட்டடிருப்பு கல்விவலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் செ.மகேந்திரகுமார் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்ட 600 மாணவர்களுக்கான பரிசுப்பொருட்களை 75 ஆயிரம் ரூபா செலவில் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவர் சமூகசேவகர் தமிழரசுக் கட்சியின் எருவில் வட்டாரத்தின் பிரதித் தலைவர் அ.வசிகரன் அவர்களது அனுசரணையில் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவர் சமூகசேவகர் தமிழரசுக் கட்சியின் எருவில் வட்டாரத்தின் பிரதித் தலைவர் அ.வசிகரன், பட்டிருப்பு வலயத்தின் ஆரம்பப் பிரிவுக்கான உதவிக்கல்விப்பணிப்பாளர் தயாளசீலன், சமூகவிஞ்ஞானப் பாடத்திற்குப் பொறுப்பான உதவிக் கல்விப்பணிப்பாளர் செ.சுரேஷ் மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஆலோசகர் தாசன் பொருளாளர் புஸ்பநாதன் செயலாளர் ஆசிரியர் இ.ஜீவராஜ் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்