நுவரெலியாவில் சிறுத்தைப் புலியின் சடலம் மீட்பு

0
365

நுவரெலியா இராகலை – ஹய்பொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹய்பொரஸ்ட் காவத்தை தோட்டத்தில் நேற்று, உயிரிழந்த நிலையில் சிறுத்தை புலி ஒன்று மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வன ஜீவராசி பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஹய்பொரஸ்ட் காவத்தை தோட்டத்தில் விவசாய காணி ஒன்றின் அருகில் காணப்படும் தேயிலை மலையையொட்டிய பற்றை காட்டுக்குள் கம்பி ஒன்றினால் கழுத்து இறுகியிருந்த நிலையிலே சிறுத்தைப் புலியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுத்தை புலி ஆறு அடி நீளத்தை கொண்டதாகவும் சுமார் 150 கிலோ எடை கொண்ட ஆண் சிறுத்தை புலி எனவும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுத்தைப் புலியின் உயிரிழப்புத் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.