NOLIMIT இலங்கை முழுவதும் 23 இடங்களில் தனது விற்பனை காட்சியறைகளைக் கொண்ட இலங்கையின் மிகப்பெரிய குடும்ப நவநாகரிக சங்கிலியாக வளர்ந்துள்ளது. 400,000 சதுர அடிக்கு மேல் சில்லறை வியாபார இட வசதியைத் தன்னகத்தே கொண்டுள்ள பெருமை அதனைச் சாரும். அதே நேரத்தில் அதன் ஆற்றல்மிக்க பணியாளர் அணியில் 1,500 க்கும் மேற்பட்ட நபர்களை உள்ளடக்கியதாக அது வளர்ந்துள்ளது. அதன் விற்பனைக் காட்சியறைகளின் வலையமைப்பில் சமீபத்தைய புதிய வரவாக, கொழும்பு சிட்டி சென்டரில் தனது புதிய விற்பனைக் காட்சியறையை NOLIMIT திறந்து வைத்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக, பல விருதுகளையும், பாராட்டுக்களையும் NOLIMIT பெற்றுள்ளது. 2009 முதல் 2021 வரை Brand Finance ஆல் நவநாகரிக சில்லறை வியாபாரத்தில் “மிகவும் அபிமானம் பெற்ற வர்த்தகநாமம்” என்ற தரப்பட்டியலில் பெயரிடப்பட்டது. Great Place to Work® மூலம் இலங்கையில் பணியாற்றுவதற்கான சிறந்த 25 நிறுவனங்கள் என தெரிவு செய்யப்பட்டமை, அதன் பணியாளர்கள் மீதான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
NOLIMIT தனது NOLIMIT BONANZA மூலம் 300 பேருக்கு முழுமையான விலைப் பட்டியல் விலக்களிப்பு மற்றும் 30% வரையான தள்ளுபடியுடன் 30 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது