காலதாமதக் கட்டணம் செலுத்தாமையால் 79 கொள்கலன் அரிசி, துறைமுகத்தில் தடுத்து வைப்பு

0
138

பல ஆண்டுகளாக துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் உள்ள 1 மில்லியன் கிலோ அரிசியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். காலதாமதக் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் 79 கொள்கலன் அரிசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். துறைமுகம் மற்றும் சுங்க அதிகாரிகளுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் நிலவும் கடும் நெரிசலைக் குறைக்கும் வகையில், தற்போது சுங்கத் திணைக்களத்தில் உள்ள 950 ற்கும் அதிகமான கொள்கலன்களை தாமதக் கட்டணமின்றி விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தந்த கொள்கலன்களில் அரிசியைத் தவிர மஞ்சள் போன்ற பொருட்களும் கையிருப்பில் உள்ளதால் அவை முன்னுரிமை பட்டியலின் கீழ் வெளியிடப்படவுள்ளன.