மக்கள் தற்போது வாழ முடியாத சூழ்நிலை: கர்தினால்

0
113

திருட்டு, ஊழல், துன்புறுத்தல்கள், வன்முறை என்பவற்றால், ஏற்பட்ட பொருளாதார அழிவுகள் காரணமாகவே மக்களுக்கு தற்போது வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அளுத்கமை பிரதேசத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற திருப்பலி பூசையில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார். இலங்கையில் சில தலைவர்கள் இன பேதங்களை ஏற்படுத்தி, மக்களைப் பிளவுப்படுத்தி, இனவாதத்தை விற்று ஆட்சிக்கு அதிகாரத்துக்கு வந்தனர். ஈஸ்டர் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு மதங்களுக்கு இடையில் பேதங்களை ஏற்படுத்த முயற்சித்தனர். இதன் பின்னர், கொள்ளை, ஊழல், துன்புறுத்தல்கள், வன்முறைகளை ஏற்படுத்தினர். இதனால், நாட்டின் பொருளாதாரத்துக்கு அழிவு ஏற்பட்டது. நாட்டின் அனைத்து மக்களும் தற்போது மிகவும் துன்பகரமான வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். மக்கள் வாழ்வதற்கு வழி இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.