காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு, கோப் குழு அழைப்பு

0
138

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகளை அடுத்த வாரம் கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எதிர்வரும் 21ஆம் திகதி கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளதாக, கோப் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த கோப் குழுவில் பல உபகுழுக்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.