நேபாளத்தில் நிலநடுக்கம் : 6 பேர் உயிரிழப்பு!

0
148

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர். நேபாளத்தில் இன்று அதிகாலை 1.57 அளவில் நில அதிர்வானது உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு 10 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக் கொண்டிருந்ததாக, தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. நேற்றுக் காலை நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் 4.5 ரிக்டர் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டது. இதேவேளை, இந்த நில அதிர்வு இந்தியாவின் மணிப்பூர் மற்றும் டில்லியிலும் உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.