வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி உயிரிழப்பு!

0
145

நவகத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமெட்டியாவ பிரதேசத்தில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். அத்தோடு மேலும் இரண்டு பெண்களும் மின்னல் தாக்கி கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை சம்பவித்துள்ளது. மின்னல் தாக்கத்துக்குள்ளானவர்கள், 1990 என்ற அவசர அம்புலன்ஸ் வண்டியின் உதவியுடன் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.