தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான பொது மக்கள் கலந்துரையாடல், வவுனியா மாவட்ட செயலகத்தில், இன்று நடைபெற்றது.
தேர்தல் ஆணைக்குழு, முன்மொழியப்பட்ட பாராளுமன்ற தெரிவிக்குழு தீர்மானங்களை முறைப்படுத்துவதற்காகவும், மக்கள் மயப்படுத்துவதற்காகவும், கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத் சந்திர தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிகேவா, வவுனியா உதவி தேர்தல் ஆணையாளர் ஜெ.ஜெனிஸ்டன், பிரதேச சபை நகர சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.