பெண்களை பாலியல் தொழிலுக்காக கடத்துவதான குற்றச்சாட்டை, ஓமான்- இலங்கைத் தூதரகம் மறுப்பு

0
130

தம்மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலுக்காக கடத்துவதில் ஈடுபட்ட குற்றச்சாட்டை, ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான் மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் புனையப்பட்டவை எனவும் எந்த ஆதாரமும் இல்லை எனவும், அவர் தெரிவித்துள்ளார். சுற்றுலா வீசா வழங்குவதை நிறுத்துமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தாம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் பெண்கள், இலங்கை அரசால் பதிவு செய்யப்பட்டே ஓமான் மற்றும் டுபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.