சவுதி அரேபிய கால்பந்து வீரர்களுக்கு பரிசாக கார்கள்!

0
135

உலகக் கிண்ண காற்பந்து தொடரில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்ற சவுதி அரேபிய கால்பந்து வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ரொய்ஸ் கார் பரிசாக வழங்கப்படுமென அந்நாட்டு இளவரசர் மொஹம்மட் பின் சல்மான் அல் சவுத் அறிவித்துள்ளார். சவூதி அரேபியா அணி யாருமே எதிர்பார்க்காத வகையில் 2 முறை உலக சம்பியனான அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இந்த வெற்றியால் சவுதி அரேபியாவில் மறுநாள் பொது விடுமுறையாக அந்நாட்டு மன்னரால் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், சவுதி அரேபிய கால்பந்து வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ரொய்ஸ் கார் பரிசாக வழங்கப்படுமென அந்நாட்டு இளவரசர் அறிவித்துள்ளார். இதுபோல விலை உயர்ந்த பரிசு வீரர்களுக்கு வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. 1994ஆம் ஆண்டு பெல்ஜியத்தை சவுதி வீழ்த்திய போது இது போலவே கார் பரிசு வழங்கப்பட்டது.