முட்டையொன்றின் விற்பனை விலையைக் கணித்து அறிவிக்குமாறு பணிப்புரை

0
125

முட்டையொன்றின் விற்பனை விலையை கணித்து ஒரு வாரத்துக்குள் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அறிவிக்குமாறு, நிதி மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. கோழிகளுக்கான உணவுகளை இந்நாட்டுக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் 1969 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை கருத்தில் கொள்ளும் போது, தற்போதைய விலைக்கு அமைய முட்டை ஒன்றை விற்பனை செய்யக்கூடிய சரியான விலையை ஒரு வாரத்துக்குள் வழங்குமாறு, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவினால் நிதி மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு, அதன் தலைவர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் இராஜங்க அமைச்சர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சந்திம வீரக்கொடி, மயந்த திசாநாயக்க, நாலக கொடஹேவா ஆகியோர் கலந்துகொண்டனர்.