பிரிடோ நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான விழிப்பூட்டும் செயலமர்வு, டிக்கோயா ஓட்டரி தோட்ட முன்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது.
பிரிடோ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மைக்கல் ஜோக்கின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பெண்கள் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பெண்களுக்கு எதிரான வாரத்தை முன்னிட்டு ஒவ்வொரு தோட்டங்களிலும் விழிப்பூட்டும் செயலமர்வை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.