மின்கட்டணத்தை தீர்மானிக்க அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் மாத்திரமே அதிகாரம் உள்ளது – ஜனாதிபதி

0
175

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில், தீர்மானிக்கும் அதிகாரம், விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் மாத்திரமே உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெறும் பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மின் கட்டண திருத்தம் குறித்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க வெளியிட்ட கருத்து தொடர்பில், விசாரணை நடத்துவது குறித்து, நாடாளுமன்றம் தீரமானிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.