தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கூட்டணியிலிருந்து உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில், அரசை எதிர்த்து வாக்களிக்க தவறியதுடன், அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து, கட்சி நிலைப்பாட்டையும் கட்டுப்பாட்டையும் மீறிய காரணத்தால், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் உடனடியாக கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்படுகிறார்.
அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையை அரசியல் குழு எடுக்கும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைக்குழு சார்பாக கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.