வவுனியாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் தினம்.

0
179

மனிதவுரிமைகள் தினமும், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு 16 நாள் செயற்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வும், வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. வவுனியா உதவி பிரதேச செயலாளர் பிரியதர்ஷினி சஜீவனின் வழிகாட்டலில், வவுனியா பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுபாஷினி சிவதர்சன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் வவுனியா பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஆர்.ஜெயவர்த்தன, பொலிஸ் உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் கலிதீன், பொலிஸ் உத்தியோக வளவாளர் எஸ்.அருளானந்தம், கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன்போது வன்முறைகளில் இருந்து பெண்கள் சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் கலந்துரையாடல்கள் மற்றும் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.