உலகக் கிண்ண காற்பந்து : போர்த்துக்கல்லை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது மொரோக்கோ!

0
148

கட்டாரில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்து தொடரில் நேற்றிரவு அல்துமாமா மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொரோக்கோ – போர்த்துக்கல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதி ஆட்டத்தில் மொரோக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதனையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன்மூலம் போர்த்துக்கல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, மொரோக்கோ அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. உலகக் கிண்ணத் தொடரில் முதன் முறையாக அரை இறுதிக்கு தகுதிபெறும் ஆபிரிக்க அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது.