மே 9 சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு திகதியிடப்பட்டது

0
121

மே 9 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு திகதியிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு சேதம் ஏற்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி காவல்துறைமா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

39 நாடாளுமன்ற உறுப்பினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை இன்றைய தினம் ஆராயப்பட்டது.

இதன்போது, அந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.