ஹாங்காங் சிறையில் அடைபட்டிருக்கும் 12 குற்றவாளிகளை விடுவிக்க அமெரிக்க தூதரகம் கோரியது. இதனால் ஆத்திரமடைந்த சீனா, ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது எனவும் இது தங்களது உள்நாட்டு விவகாரம் என்றும் காட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சோ லீஜியன் அமெரிக்காவின் தலையீடு கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.
ஹாங்காங்கை முன்னதாக சீனா தனது தேசிய பாதுகாப்பு சட்டம் மூலமாக கையகப்படுத்த நினைத்தது. பிரிட்டன் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் தன்னிச்சையாக இயங்கி வந்தது. சீனா, ஹாங்காங்கின் சில விஷயங்களை மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை இருந்துவந்தது. ஆனால் தற்போது ஹாங்காங் ஜனநாயகவாதிகளை ஒடுக்கி சீன கம்யூனிச அரசு ஹாங்காங்கை முழுவதுமாக கையகப்படுத்த முயற்சி மேற்கொள்கிறது.
கடந்த ஆண்டு இதனால் அதிருப்தி அடைந்த அமெரிக்கா, ஹாங்காங் உடனான வர்த்தகத் தொடர்பை முறித்துக்கொண்டது. தற்போது ஹாங்காங் சிறையில் உள்ள 12 பேரை விடுவிக்க அமெரிக்க தூதரகம் கோரியுள்ள நிலையில் சீனா கொதிப்படைந்து உள்ளது. சீனாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிட கூடாது என்று தற்போது சீன வெளியுறவு துறை கட்டாயமாக தெரிவித்துள்ளது.