பிளாஸ்ரிக் போத்தல்களை மாத்திரம் பயன்படுத்தி அமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம் வெள்ளவத்தை கடற்கரையில் தொடர்ந்து நான்காவது வருடமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
12 அடி உயரம் கொண்ட இந்த கிறிஸ்துமஸ் மரம் கடற்கரையில் இருந்து சேகரிக்கப்பட்ட 1500 பிளாஸ்ரிக் போத்தல்களைப் பயன்படுத்தி செய்யப்பட்டது.
பியர்ல் ப்ரொடெக்டர்ஸ், ஐ. ஐ. டியின் றோட்டரக்ட் கழக உறுப்பினர்கள், ஆஷா அறக்கட்டளை மாணவர்கள் இணைந்து, ஜீரோடிராஷ் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆண்டு மரத்தை அமைத்துள்ளனர். .
அதிகரித்து வரும் பிளாஸ்ரிக் மாசுபாடு காரணமாக இலங்கையின் கடல் சூழல் எதிர்கொள்ளும் சவால்களை வெளிப்படுத்தும் முகமாக இந்த மரம் அமைக்கப்பட்டதாக பேர்ள் புரடக்டர் தெரிவித்துள்ளது.
இந்த மரம் டிசெம்பர் 30 வரை காட்சிப்படுத்தப்படும் என்றும் பின்னர் இந்த போத்தல்கள் ஜீரோ ட்ராஷ் மூலம் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.