இந்த அரசில் எந்த அமைச்சுப் பதவியையும் பொறுப்பேற்க மாட்டேன்: நாமல் ராஜபக்ச

0
121

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த அரசில் எந்த அமைச்சுப் பதவியையும் நான் பொறுப்பேற்கமாட்டேன் என பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எனக்கும் எந்தவித முரண்பாடும் இல்லை. ரணில் பழுத்த அரசியல்வாதி. சிறந்த தலைவர். எனினும், அவர் தலைமையிலான தற்போதைய அரசில் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்க நான் தயார் இல்லை. எனக்கு அமைச்சுப் பதவி கிடைக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் எவரும் முரண்படவும் தேவையில்லை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.