200 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

0
100

சீனாவின் Zhengzhou நகரில் உள்ள பாலத்தில் பயங்கர கார் விபத்துக்குள்ளானதில் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
மோசமான வானிலை மற்றும் சாரதிகளின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தால் வாகனங்களில் சென்ற சிலர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து காரணமாக பெருமளவான மக்கள் வாகனங்களில் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணிகளுக்காக 11 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 66 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.