அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் செயற்படக் கோரி, மன்னாரில், 5 ஆவது நாளாக போராட்டம்

0
133

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில், ‘ஐக்கிய இலங்கைக்குள், ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு, மீளப் பெற முடியாத சமஷ்டியை வலியுறுத்துவதற்கு’, அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் செயற்பட கோரி, வடக்கு கிழக்கு மாகாணங்களில், தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், குறித்த கவனயீர்ப்பு போராட்டம், மன்னார் மாவட்டத்தில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின், வடக்கு மாகாண இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில், 5 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, சிவில் அமைப்புகள், பாதிக்கப்பட்ட மக்கள், கல்விமான்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று, பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வாசித்தனர்.