முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மாநகர சபையின் மேஜர் வேட்பாளராக களமிறங்கத் தீர்மானம்

0
156

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்துவிட்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாநகர சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும் நோக்கில் மேஜர் வேட்பாளராக அவரைக் களமிறக்குவதற்கு அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது.