பிரதேச சபையின் முன்னாள் தலைவர்க்கு எதிராக முறைப்பாடு

0
122

நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பிரதேச சபையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில், ஜக்கிய தேசிய கட்சியின் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் முருகைiயா ரவிந்தினுக்கு எதிராக, நோர்வூட் பிரதேச சபையின் செயலாளரினால் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நோர்வூட் பிரதேச சபையின் கீழ் இயங்கும் டிக்கோயா புளியாவத்தை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி கோழி இறைச்சி விற்பனை செய்து வந்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளச் சென்றிருந்த நோர்வூட் பிரதேச சபையின் அதிகாரிகளுக்கு, ஜக்கிய தேசிய கட்சியின் அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் தலைவர் முருகையா ரவிந்திரன் இடையூறு ஏற்படுத்தியதுடன், அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரின் சேவைக்கும் இடையூறினை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.