பிரதேச சபை உத்தியோகத்தர்களின் சேவைக்கு இடையூறு: நபர் கைது!

0
139

நுவரெலியா நோர்வூட் பிரதேச சபை உத்தியோகத்தர்களின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தி, உத்தியோகத்தர்களை அச்சுறுத்திய நபரை கைது செய்யும்மாறு கோரி, இன்று காலை, நேர்வூட் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் பணிபகிஷ்கரிப்பல் ஈடுபட்டதுடன், நோர்வூட் பிரதேச சபை முன்பாக, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டமானது, இன்று காலை 8.30 மணியில் இருந்து காலை 11.00 மணி வரை முன்னெடுக்கக்பட்டது. இதன் போது, உள்ளுராட்சி சட்டங்களை மதிக்க தெரிந்துக் கொள், கைது செய் அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்தியவர்களை கைது செய், நிலைநாட்டு நிலைநாட்டு சட்டத்தை நிலைநாட்டு, பாதுகாப்பு தரப்பே அரசியலுக்கு அடிபணியாதே போன்ற கோஷங்களையும் பாதாதைகளையும், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் தாங்கியிருந்தனர்.

கடந்த 11 ஆம் திகதி செவ்வாய்கிழமை, புளியாவத்தை பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடை ஒன்று, அனுமதி பத்திரம் பெறாது, கோழி இறைச்சி விற்பனை
செய்யவதை அறிந்த நோர்வூட் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், அப்பகுதிக்கு சென்ற வேளை, அந்த பகுதியில் உள்ள நபர் ஒருவரினால் அச்சுறுத்தப்பட்டு, தகாத வார்தைகளால் பேசப்பட்டமை மற்றும் அரச சேவைக்கு இடையூறுவிளைக்கப்பட்டமை தொடர்பில், நோர்வூட் பிரதேச சபை செயலாளரால், நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாடு செய்யப்பட்டு, இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில், சம்பநதப்பட்ட நபர், இதுவரையிலும் கைது செய்யப்பட்வில்லை எனவும், தம்மை அச்சுறுத்திய நபரை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், தமக்கு பாதுகாப்பு வேண்டு எனவும், இது தொடர்பாக, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை தலைவர் முருகையா இரவிந்திரன் கைது செய்யப்பட்டுள்ளதாக, நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இன்று மாலை 3.00 மணியளவில், கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக, பொலிஸார் குறிப்பிட்டனர். நோர்வூட் பிரதேச சபை உத்தியோகத்தர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நிலையில், ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலை
படுத்துவதற்கான நடவடிககைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.