முச்சக்கர வண்டி சாரதி கொலை: 5 ஆண்டுகளின் பின் கொலையாளி கைது!

0
178

மட்டக்குளி பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை அவரது மனைவி மற்றும் பிள்ளையின் கண்முன்னால் கொலை செய்த சம்பவம் தொடர்பில் 5 வருடங்களின் பின்னர் பிரதான சந்தேக நபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி முச்சக்கரவண்டி சாரதி தனது குழந்தை மற்றும் மனைவியுடன் பயணித்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதியின் மனைவி வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.