பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு தங்கநகை, பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்ற இருவர் கைது

0
120

கொழும்பு, வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லங்சியாவத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பெண்ணொருவரை கொலைசெய்துவிட்டு வீட்டிலிருந்த தங்க நகைகள், பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்ற பெண்ணொருவர் உட்பட இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த இருவரும் வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெக்னிக்கல் சந்தியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சமன்புர, திஹாரிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 23 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 2 தங்கச் சங்கிலிகள், 6 தங்க காப்புகள், 6 மோதிரங்கள், கைக்கடிகாரம், தொலைபேசிகள், வெளிநாட்டு நாணங்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.