பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின்
விநியோகித்த சந்தேகநபர் கைது

0
162

அம்பாறை கல்முனையில் பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை, விநியோகித்த சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.
சந்தேக நபர் அதே பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் அவரது உடமையிலிருந்து 1 கிராம் 50மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்களுடன் நிந்தவூர் பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தப்பட்டுள்ளார்.