மாவனல்லை – ஹெம்மாதகம பகுதியில், நீர்க்குழாய் வெடித்து வயோதிபர் உயிரிழப்பு!

0
168

மாவனல்லை – ஹெம்மாதகம வீதியில் வத்தேவ வரையில் புதிதாக போடப்பட்ட நீர் குழாய் வெடித்ததில், அவ்வழியாக பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாவனல்லை நீர் வழங்கல் சபையுடன் இணைந்த நிறுவனமொன்று குறித்த குழாயின் அழுத்தத்தை பரிசோதித்துள்ளது. இதன்போது குழாய் வெடித்ததில், சம்பவ இடத்தினூடாகச் சென்ற ஹெம்மாதகமையைச் சேர்ந்த 68 வயதுடைய நபர் காயமடைந்து மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.