கல்முனை அஸ்ஸுஹரா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி

0
180

அம்பாறை கல்முனை அல்ஸூஹரா வித்தியாலயம் ஆரம்பிக்கபட்டு, 87 வருடங்கள் கடந்துள்ள நிலையில், முதன்முறையாக இல்ல விளையாட்டுப் போட்டி
நடாத்தப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியாவின் முயற்சியால், 87 வருடங்களுக்குப் பின்னர் விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது.
பிரதம விருந்தினராக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் கலந்து கொண்டார்.
இல்ல விளையாட்டு போட்டியில் பேர்ல்ஸ் இல்லம் 341 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.
கல்முனை வலயக் கல்விப் பிரதி பணிப்பாளர், மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், அயல் பாடசாலை அதிபர்கள், பாடசாலை
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் விளையாட்டு நிகழ்வில் பங்கேற்றனர்.