எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பஸில் ராஜபக்ஷ போட்டியிடுவார் என்று அவருக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக பஸில் ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையையும் துறக்க முன்வந்துள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பஸில் ராஜபக்ஷ தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். பஸிலை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்பது தவறான தகவல். இதனை எதிரிகள் செயற்கையாக உருவாக்கி பரப்பி வருகின்றனர் எனவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.