துருக்கி, சிரியாவில் நில அதிர்வுகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

0
205

தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நில நிலக்கத்தில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கியில் 17 ஆயிரத்து 674 பேரும் சிரியாவில் 3 ஆயிரத்து 377 பேரும் இறந்துள்ளனர். அதன்படி இன்று காலை வரை உறுதிப்படுத்தப்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிருடன் இருந்த பலர் தண்ணீர், உணவு இன்றியும், கடும் குளிராலும் உயிரிழப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பதாக சுகாதார பிரிவினர் கவலை தெரிவிக்கின்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புக்கள் குறைந்துவருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.