அவுஸ்திரேலியாவில் சுரங்கம் இடிந்ததால் ஊழியர்கள் இருவரை காணவில்லை

0
162

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில்  சுரங்கமொன்று இடிந்ததால் ஊழியர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர். 

சுரங்கம் இடிந்தபோது இவர்கள் 125 மீற்றர் தூரத்தில் வாகனமொன்றில் பயணம் செய்துகொண்டிருந்தனர். 

அதனால் 25 மீற்றர் ஆழத்தில் அவர்கள் இருவரும் வீழ்ந்தனர். அங்கிருந்த 3 ஆவது நபர் ஒருவர் தப்பிவந்து தகவல் தெரிவித்தார்.

ட்ரோன் ஒன்றை பயன்படுத்தி நடத்தப்பட்ட தேடுதல் மூலம், அவர்கள் பயன்படுத்திய வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், இரு நபர்களும் 24 மணித்தியாலங்களாகியும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

டைலான் லாங்ரிட்ஜ், ட்ரேவர் டேவிஸ் ஆகிய இருவரே காணாமல் போயுள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.