அம்பாறை கல்முனை ஆதார வைத்தியசாலையில், புற்றுநோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

0
182

அம்பாறை கல்முனை ஆதார வைத்தியசாலையில் புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

பிரதி வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜெ.மதன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் அகமட் இக்கபால், பொது வைத்திய நிபுணர் டாக்டர் என்.இதயகுமார், மயக்கமருந்து நிபுணர் டாக்டர் மியூரி உட்பட் பலர்,விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

புற்றுநோய் பரவல், ஆரம்ப அறிகுறிகள், அதற்கான சிகிச்சை, பராமரிப்பு முறைகள் தொடர்பாகவும் கருத்துரைகள் வழங்கப்பட்டன.