இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதியும் இலங்கை விமானப்படை தளபதியும் சந்திப்பு

0
164

இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் முஹம்மது அம்ஜத் கான் நியாசி, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சனவை சந்தித்து கலந்துரையாடினார்.

இச் சந்திப்பு நேற்று 27 ஆம் திகதி விமானப்படை தலைமயகத்தில் இடம்பெற்றது. 

பாகிஸ்தான் கடற்படை தளபதியினை கொழும்பு விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாண்டோ தலைமையில் விமானப்படை வர்ண அணிவகுப்பு  படைப்பிரிவின் இராணுவ அணிவகுப்பு  மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

இருதரப்பினருக்குமான  கலந்துரையாடலின் பின்பு  இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில்  நினைவு சின்னம்களும்  பரிமாறப்பட்டன.

மேலும் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி விமானப்படை  பணிப்பாளர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.