இம் மாதத்திற்குள் 9 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு

0
147

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இந்த மாதத்திற்குள், தான் உட்பட 9 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் காமினி லொகுகே, ஜனக பண்டார தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.எம்.சந்திரசேன, சி.பி.ரத்நாயக்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் சரத் வீரசேகர ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதியிடம் முன்மொழியப்பட்டுள்ளன.

இதேவேளை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் பெயர் அந்த பட்டியலில் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.