1 கிலோ 65 கிராம் கேரள கஞ்சா மற்றும் கஞ்சாவை விற்று பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 96 ஆயிரம் ரூபா பணத்துடன் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்த இழுப்பைக் கடவை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமினர் இலுப்பைக் கடவை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த 2 ஆம் திகதி இலுப்பைக் கடவை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமினருக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, இழுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவம்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த இளைஞன் கேரள கஞ்சா மற்றும் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தேவம்பிட்டி பகுதியைச் சேர்ந்தவராவார்.