32 பொது நிறுவனங்களால் மூன்று வருடங்களில் 46 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நட்டம்!

0
164

420 பொது நிறுவனங்களில் 32 நிறுவனங்கள் அதிக ஊழல் மற்றும் பெரும் நட்டத்தை ஏற்படுத்தியவை என கோப் குழு அடையாளம் கண்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனங்கள் மூன்று வருடங்களில் 46 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நட்டத்தை சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க வேலைகள் தொடர்பில் முறையான கணக்காய்வு மற்றும் தலையீடு அவசியமானது எனவும் காமினி வலேபொட சுட்டிக்காட்டியுள்ளார்.