குடும்பத் தகராறு: மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவன்!

0
204

ஊரகஸ்மன்ஹந்திய, பருஸ்ஸகொட, மஹுரகஹ பிரதேசத்தில் நேற்று (05) பிற்பகல் நபர் ஒருவர் தனது மனைவியை கழுத்J அறுத்துக் கொலை செய்துள்ளார்.

34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறுதான் இந்தக் கொலைக்குக் காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று (05) பிற்பகல் கணவன்-மனைவி இடையே சண்டை மூண்டதையடுத்து, வீட்டின் பின்புறம் இருந்த கத்தியால் அவரது கழுத்தில் சரமாரியாகத் தாக்கி கணவன் கொலை செய்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் மீன் வியாபாரி என்பதுடன், அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று (06) நீதிமன்றில் முன்னிலைப்படவுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.