ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக 6ஆவது கால முறை மீளாய்வு கூட்டம் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் இந்த மீளாய்வுக்கூட்டம் தற்போது ஜெனிவாவில் நடக்கிறது.
இந்த நிலையிலேயே இலங்கை தொடர்பான கலந்துரையாடல் நாளை ஆரம்பமாகவுள்ளது.
ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக இந்தக் கூட்டத்தில் இலங்கை தரப்புக்கு தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.