உணவகங்களில் சிற்றுண்டிகளின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விலைகள் இன்று அறிவிக்கப்படும் என அதன் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முதல் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால் குறைப்பதற்கு பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.