ரந்தெம்பே தேசிய கடெற் பயிற்சி நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாணவி அலறியடித்த எழுந்தோடியது ஏன்?

0
124

ரந்தெம்பே தேசிய கடெற் பயிற்சி நிலையத்தில் ஒரு வாரகால  பயிற்சிக்காக வந்திருந்த மாணவி ஒருவர் விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த போது, அங்கு பிரவேசித்த நபர் ஒருவர் மாணவியின் உடலைத்  தடவிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக ஹசலக்க பொலிஸார் தெரிவித்தனர்.   

தான் உறங்கிக் கொண்டிருந்தபோது தனது படுக்கைக்கு வந்த குறித்த நபர், தனது ஒரு காலை தடவியதும் தான் எழுந்து  அலறியதாகவும், இதனால் பீதியடைந்த அந்த நபர்  ஓடியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.

பாதையில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகளில் இருந்து  குறித்த நபர் ஓடுவதனை பார்த்ததாகவும், தான் உறங்கிக் கொண்டிருந்த படுக்கைக்கு அருகில் ஆண் ஒருவரைக் கண்டதாகவும்  மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.